மாணவிக்கு பாலியல் தொல்லை பேக்கரி ஊழியர் கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ம்தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, அதே பகுதியில் உள்ள பேக்கரியில் சிறுமி குளிர்பானம் வாங்கியுள்ளார். அப்போது, சிறுமிக்கு கடை ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லும்போது, அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் உதவியுடன் குழந்தைகள் அவசர உதவி எண் 1098க்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். குழந்தைகள் உதவி கரம் குழுவினர் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பிறகு மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரி ஊழியர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரகு (32) என்பவரை போக்சோவில் கைது செய்து  திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: