சில்லி பாயின்ட்...

* லேவர் கோப்பை தொடரில் பெடரருடன் இணைந்து விளையாடிய இரட்டையர் ஆட்டத்தில் தோற்றதை அடுத்து, எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடாமால் விலகிக் கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். இதையடுத்து, ஐரோப்பிய அணியில் அவருக்கு பதிலாக கேமரான் நோரி சேர்க்கப்பட்டுள்ளார்.

* சூரத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய் (குஜராத்), மகளிர் ஒற்றையர் பிரிவில் சுதிர்தா முகர்ஜீ (மேற்கு வங்கம்) சாம்பியன் பட்டம் வென்றனர்.

* கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் பேட்மின்டனில் இருந்து விலகியுள்ளார்.

* இந்தியா - சிங்கப்பூர் அணிகளிடையே நடந்த நட்புரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தின் ஒரு கேலரிக்கு, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி பெயரை வைக்க உள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: