×

கொரியா ஓபன் டென்னிஸ் பைனலில் இன்று ஆஸ்டபென்கோ - அலெக்சாண்ட்ரோவா பலப்பரீட்சை

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், யெலனா ஆஸ்டபென்கோ - எகடரினா அலெக்சாண்ட்ரோவா இன்று மோதுகின்றனர். அரையிறுதியில் இங்கிலாந்தின்  எம்மா ரடுகானுவுடன் (19 வயது, 77வது ரேங்க்) மோதிய முதல்நிலை வீராங்கனை ஆஸ்டபென்கோ (25 வயது, லாத்வியா) முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். எனினும், 2வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஆஸ்டபென்கோ 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டில் ஆஸ்டபென்கோ 3-0 என முன்னிலை வகித்தபோது ரடுகானு காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். இதையடுத்து ஆஸ்டபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி வீராங்கனை டட்டியானா மரியாவை (35 வயது, 80வது ரேங்க்) எதிர்கொண்ட ரஷ்ய நட்சத்திரம் எகடரினா அலெக்சாண்ட்ரோவா (27 வயது, 24வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்  ஆஸ்டபென்கோ - அலெக்சாண்ட்ரோவா மோதுகின்றனர். இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின்  ஆசியா முகமது - சப்ரினா சாந்தமரியா இணை கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) - யானினா விக்மேயர் (ருமேனியா) ஜோடியை சந்திக்கிறது.

Tags : Astabenko-Alexandrova ,Korea Open , Astabenko-Alexandrova showdown in Korea Open tennis final today
× RELATED சாத்விக் – சிராக் சாம்பியன்