உ.பி சட்டப்பேரவையில் செல்போனில் சீட்டு விளையாட்டு, குட்கா போடும் பாஜ எம்எல்ஏ.க்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்குள் பாஜ எம்எல்ஏ.க்கள் குட்காவை சாப்பிடுவதும்,  செல்போனில் சீட்டு விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் எம்எல்ஏ.க்களை யாரும் சோதனையிடுவது கிடையாது. எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் அவர்கள் கொண்டு செல்லலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், பாஜ எம்எல்ஏ ரவி சர்மா என்பவர் சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது குட்காவை எடுத்து சாப்பிடுகிறார். இவரின் இந்த செயலை சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் இன்னொரு எம்எல்ஏ  தனது செல்போனில் சீட்டு விளையாடுகிறார். இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ள சமாஜ்வாடி கட்சி,  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் அகிலேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில்,  ‘சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்கள் குட்கா போடுகின்றனர். செல் போனில் சீட்டு விளையாடுகின்றனர். 2 பேரும் பாஜ.வை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. இது மக்களை அவமானப்படுத்துவதாகும். இந்த வீடியோவை பதிவு செய்து ஷேர் செய்த பாஜ எம்எல்ஏக்களுக்கு நன்றி. இந்த எம்எல்ஏக்கள் மீது முதல்வர்  யோகி நடவடிக்கை எடுப்பாரா?’ என கேட்டுள்ளார்.

Related Stories: