கேரளாவில் மாஸ்க் அணிவது கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முக கவசத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பொது இடங்களில் முக கவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் பெரும்பாலும் பொது இடங்களில் யாரும் முககவசம் அணிவதில்லை. இந்நிலையில் கேரளாவில் பொது இடங்களில் முக கவசத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்த அவசர சட்டம் உடனடியாக கேரளாவில் அமலுக்கு வரும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு எதிராக போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

Related Stories: