×

லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து சவுக்கு சங்கர் டிஸ்மிஸ்: உத்தரவை வாங்க மறுத்ததால் அறையின் வெளியே ஒட்டிய போலீசார்

கடலூர்:  யூடியூபர் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2003ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.40000 வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் ஆஜரானார். அப்போது அவருக்கு எப்படி ரூ.40 ஆயிரம் அரசு சம்பளம் வழங்கி வருகிறது என்றும், அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையில் கடந்த வாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரை பணிநீக்கம் செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவிட்டார். இதற்கான நோட்டீசை, சிறையில் இருக்கும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிறை அதிகாரிகளுடன் சென்று வழங்கினர். ஆனால் அந்த நோட்டீசை வாங்க சவுக்கு சங்கர் மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அந்த நோட்டீஸ் சிறையில் அவரது அறை வாசலில் ஒட்டப்பட்டது.

Tags : Chavku Shankar , Chavku Shankar dismissed from anti-bribery department: Cops stuck outside room after refusing to accept order
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து...