விசைத்தறி அதிபர் மனைவி பன்றிக்காய்ச்சலுக்கு பலி

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் வெங்கடேசபுரியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். விசைத்தறி அதிபரான இவரது மனைவி சரோஜா(53). இவர் நுரையீரல் பாதிப்பால், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 19ம் தேதி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி சரோஜா உயிரிழந்தார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வெங்கடேசபுரி மற்றும் ஏரிக்காடு முழுவதும் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: