பாதுகாவலரின் அஜாக்கிரதையால் வங்கியில் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில், திருச்செங்கோடு ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்துச் செல்ல சேலம் கோட்டையில் உள்ள மெயின் வங்கியில் இருந்து காசாளர் அப்துல்ஜபீருடன், வங்கி பாதுகாவலர், நாமக்கல் மாவட்டம் படைவீட்டை சேர்ந்த சிவரத்தினம்(48) துப்பாக்கியுடன் சென்றார். அப்போது திடீரென அவரது துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சத்தம் கேட்டது. உடனே வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவலர் சிவரத்தினம் கையில் வைத்திருந்த துப்பாக்கியில் அவரது கைவிரல் பட்டு குண்டு வெடித்து கீழே விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: