×

குட்கா வியாபாரியிடம் மாதம் ரூ.40,000 மாமூல் வாங்கிய எஸ்.ஐ: அதிரடியாக சஸ்பெண்ட்

சேலம்: தமிழகத்தில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் குட்கா விற்ற வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பள்ளப்பட்டி எஸ்.ஐ. பாரதிராஜாவுக்கு மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் மாமூல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து உதவி கமிஷனர் ஆனந்தி அறிக்கையின்படி எஸ்.ஐ. பாரதிராஜாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோதா உத்தரவிட்டார்.

Tags : SI ,Gutka , SI who bought Rs.40,000 per month from Gutka seller: Action suspended
× RELATED வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐக்கு அடி உதை: போதை ஆசாமி கைது