×

‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை கண்டுபிடிங்க சார்...’ஆண்டிபட்டி போலீசில் திமுகவினர் மனு

ஆண்டிபட்டி: மதுரையில் மாயமான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை கண்டுபிடித்து தர வேண்டும் என திமுகவினர் ஆண்டிபட்டி போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். தமிழகம் வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் 750 படுக்கைகள், 250 ஐ.சி.யூ படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். இதனையடுத்து, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையிலான திமுகவினர் நேற்று ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.  அதில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியபடி, 95 சதவீதம் பணி முடிவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்க சென்றோம். அப்போது, அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை காணவில்லை. எனவே, மாயமான கட்டிடங்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

Tags : Madurai ,AIIMS ,DMK ,Antipatti , 'Find Madurai AIIMS hospital building sir...' DMK appeals to Antipatti police
× RELATED எய்ம்ஸ் பணிகளுக்கான நிதியை ஜப்பான்...