நன்னடத்தையால் மாநிலம் முழுவதும் சிறைக்கைதிகள் 75 பேர் விடுதலை

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை காரணமாக ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தவர்களில் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்படுகிறவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.  அதில், சென்னை புழல் சிறையில் 2 பெண் கைதிகள் உட்பட 15 பேர், வேலூரில் 2, கடலூரில் 5, சேலம் 1, கோவை, திருச்சியில் தலா 12, மதுரையில் 22, புதுக்கோட்டையில் 4, சென்னை புழல் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் தலா 2 என 75 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் இருந்த 75 பேரும் விடுவிக்கப்ட்டனர். அவர்களை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். சென்னை புழல் சிறையில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள், சிறையில் பணியாற்றியதற்கான ஊதியம் வழங்கப்பட்டது. சிறைத்துறை துணை தலைவர் முருகேசன், சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் விடுதலையான கைதிகளை சிறையில் இருந்து வழியனுப்பி வைத்தனர். முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: