தமிழக பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு, 3 பேர் இடமாற்றம்: பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு, 3 பேர் பணியிடமாற்றம் செய்து  பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மண்டல துணை தலைமை பொறியாளர் அருணாசலம், திருநெல்வேலி கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், தரக்கட்டுப்பாட்டு பிரிவு செயற்பொறியாளர் புனிதவேல் சென்னை மண்டல இணை தலைமை பொறியாளராகவும், திருவாரூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு துணை தலைமை பொறியாளர் அசோக், சிவகங்கை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், தூத்துக்குடி கோட்ட கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு செயற் பொறியாளர் தேவி, தஞ்சாவூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், வேலூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் சங்கரலிங்கம், வேலூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக செயற்பொறியாளர் சத்யா வாகேஸ்வரன் கோவை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பாளராகவும், நாகை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் மோகன சுந்தரம், திருவண்ணாமலை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதைப்போன்று சென்னை மண்டல இணை தலைமை பொறியாளர் இசை அரசன் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், சிவகங்கை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் மாதவன் மதுரை மண்டல கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், வேலூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம், சேலம் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: