ஒற்றுமையை காட்டும் நேரம்: ராகுலுக்கு ஹாலிவுட் நடிகர் ஆதரவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘பாசிசவாதிகளுக்கு எதிராக ஒற்றுமையை காட்டும் நேரம் இது’ என்று ஹாலிவுட் நடிகர் ஜான் குசக், ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். செரன்டிப்பிட்டி, ஹை பிடலெட்டி, கான் ஏர், 2012 ஆகிய பெரிய வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஜான் குசக். 56 வயதாகும் இவர், டிவிட்டரில் வௌியிட்ட பதிவில், ‘கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ராகுல் நடைபயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) மேற்கொண்டு வருகிறார். பாசிசவாதிகளுக்கு எதிராக ஒற்றுமையை காட்டும் நேரம் இது. அவர்களுக்கு இது புரியட்டும்’ என தெரிவித்துள்ளார். ஜானின் இந்த பதிவுக்கு உலகம் முழுவதும் நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும், குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக போராடிய முஸ்லிம்களுக்கும் இவர் ஆதரவு அளித்திருந்தார்.

Related Stories: