அதிகரிக்கும் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிகரித்து வரும் தொற்று காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவ துறை அமைச்சர் நோய்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னாலும், அண்மைக் காலமாக காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியுள்ளன. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Related Stories: