பஸ் நிறுத்த மேற்கூரை தரமாக இருக்கிறதா? அரசு ஆய்வு செய்ய விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பேருந்துகளில் அன்றாடம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை ஓட்டை உடைசலாக காட்சி அளிக்கிறது. இதனால் பேருந்து நிறுத்தங்கள் எங்கே இருக்கிறது என தெரியாமல் பயணிகள் நாள்தோறும் தவித்து வருகின்றனர். தமிழக அரசு, சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சேதமடைந்த மற்றும் நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும்.

Related Stories: