மக்களிடம் வரிவசூல் செய்வதில் மோடி ஒரு ‘பிக்பாக்கெட்’

ஐதராபாத்: ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் மா.கம்யூ கட்சி சார்பில் தேசப் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இதில் மா.கம்யூ கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏழை மக்களிடம் இருந்து ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் கோடி வசூல் செய்கிறது.

பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட்; அவர் ஜிஎஸ்டி முறையில் மக்களின் பாக்கெட்டில் ஓட்டை போடுகிறார். இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. அவர்கள் உலகின் பெரிய பணக்காரர்களாக மாறி வருகின்றனர். ஆங்கிலேயே ஆட்சியாளர்களை போன்று மோடி ஆட்சியை நடத்தி வருகிறார்’ என்று குற்றம்சாட்டினார்.

Related Stories: