பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருத்தணி: கோவை பாஜ பிரமுகர் கடை மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதன்காரணமாக பதற்றம்ஏற்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் செபாஸ் கல்யாண் உத்தரவின்படி, டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை நடத்தி அனுப்பினர். திருத்தணி பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மலைக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: