சென்னை சைதாப்பேட்டையில் நாளை மாலை நடக்கும் நாடார்கள் சுயமரியாதை மாநாட்டில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்: சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள்  சார்பில், நாடார்கள் சுயமரியாதை மாநாடு சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர்  கல்லூரி வளாகத்தில்  நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது. சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தலைமை வகிக்கிறார். அன்னை வேளாங்கண்ணி கல்வி குழும துணை தலைவர் தே.தேவானந்த், சிம்ம பேரவை நிறுவன தலைவர் ராவணன், ராமசாமி நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன், சத்திரிய பாசறை தலைவர் ஆதித்யா, சம்பத்குமார் தேசிய நாடார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் கு.சிவாஜிராஜன், தேசிய காமராஜர் மக்கள் இயக்க தலைவர் த.சாலிபாண்டியன், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி, பொருளாளர் ஆடிட்டர் க.சிவராஜ், அமைப்பாளர் மார்க்கெட் ராஜா, காப்பாளர் செ.வீரக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் சி.பா.பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் வ.சி.பொன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் பா.வேல்குமார் முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான பாமக பொருளாளர் கவிஞர் ம.திலகபாமா வரவேற்கிறார்.

பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்திரபாண்டியனாரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சமுதாய சேவையில் சிறந்து விளங்கும் 130 சிறந்த சங்கங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விருதுகள் வழங்கி கவுரவப்படுத்துகிறார். தமிழர் தந்தை ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு 118 மாணவர்களுக்கு தனியார் தொலைக்காட்சி இயக்குனர் வை.வேல்முருகன் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். பத்ம டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு 87 விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு நாடார் சங்க துணை பொதுச்செயலாளர் அ.சே.சுரேஷ்மாறன், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்குகிறார். மாநாட்டு சிறப்பு மருத்துவ முகாமை விஎல்சி குழும தலைவர் வி.எல்.சிபிரேம் துவங்கி வைக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் முன்னாள் அமைச்சர்  மா.பா.க.பாண்டியராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு தகவல் ஆணையர் எஸ்‌.செல்வராஜ், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராஜா, மாநில துணை தலைவர் கரு‌.நாகராஜன், சமுதாய அரசியல் கட்சி பிரமுகர்கள்,  தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், நாடார்கள் சங்க நிர்வாகிகள், நாடார் சமுதாய உணர்வாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மாநாட்டில், நாடார் சமுதாய சொந்தங்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.

Related Stories: