டெல்லி, ஹரியானா மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் கனமழை: இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி

டெல்லி : டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேச எல்லைகளில் பெய்து வரும் மழையால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் பெய்த தொடர் மழையால் பேகம்பூர் கிராம சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நரசிங்பூர் பகுதிகளில் கனமழையால் டெல்லி - குருகிராம் விரைவு சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்ற நிலையில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையில் இதே நிலை இருந்தது. குருகிராமில் உள்ள முக்கிய சாலைகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கும் நிலையில் ராஜுவ் செளக் பகுதியில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால், அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்று முற்றிலுமாக தண்ணீரால் சூழப்பட்டு மூழ்கியுள்ளது. 

Related Stories: