ராமநாதபுரத்தில் அரசு டாக்டரின் கார்களுக்கு நள்ளிரவில் தீ வைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் மனோஜ் குமார். கேணிக்கரை பகுதியில் உள்ள இவரது கிளினிக் வளாகத்தில் நிறுத்தியிருந்த இரண்டு கார்களுக்கு மர்மநபர்கள் நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எஸ்பி தங்கதுரை மற்றும் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டாக்டர் மனோஜ் குமார் பாஜ தீவிர ஆதரவாளர் ஆவார். செப்.17ல் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: