ஆபாச படம் வழக்கு: நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

டெல்லி: குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்த தொடர்பான வழக்குகள் தொடர்பாக 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ இரு வழக்குகளை பதிவு செய்து ஆபரேஷன் மேகசக்ரா என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்டர்போல் சிங்கப்பூர் பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம் செய்தது தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகளை பதிவு செய்து கடந்த நவம்பர் மாதம் ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அந்த சோதனைக்கு ஆபரேஷன் கார்பன் என பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ள  வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில்  சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: