சீனாவில் அறுவடை கால கொண்டாட்டம்: விவசாயிகளை உற்சாகமூட்டும் வகையில் 5-ஆம் ஆண்டு விழா

சீனா: சீனாவில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் 5-வது அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சீனாவில் விவசாயிகளை உற்சாகபடுத்தும் வகையில் தொடர்ந்து 5-வது ஆண்டாக அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சீனாவின் தென்மேற்கு நகரமான சிங்டுவில் இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகத்தான அறுவடையை பறைசாற்றும் விதமாக சுமார் 20 நெல் வயல்களில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தயாரிப்புகளை கட்சிப்படுத்தியது, விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, உடற்பயிற்சி போட்டிகள் என அறுவடை திருவிழா கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் களைகட்டியது.

நடப்பாண்டில், சீனாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், திடீரென சில பகுதிகளில் ஏற்பட்ட கொரோனா தொற்று அதிகரிப்பு,தெற்கு பகுதியில் நிலவிய கடும் வறட்சி போன்ற காரணங்களால் குளிர்கால விதைப்பு பணிகள் தாமதமாகவே தொடங்கின. எனினும், கடந்த 10 ஆண்டுகளில் சீனா விவசாயத்தில் வேகமாக அதிகரித்து வரும் நவீன மயமாக்கல் உற்பத்தியை பெருக்கிவருகிறது. பல சவால்களுக்கு மத்தியிலும் நடப்பாண்டிலும் இலையுதிர் கால அறுவடை கூடியே உள்ளது.

சீனாவை பொறுத்தவரை 3 முக்கிய அறுவடை காலங்கள் உள்ளன. நெல் அறுவடை ஆண்டின் தொடக்கத்திலும், தானியங்கள் அறுவடை கோடைகாலத்திலும் மற்றும் இலையுதிர் காலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் இலையுதிர் கால அறுவடை தான் ஓராண்டுக்கு தேவையான தானியங்களில் 75 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் நடப்பாண்டு இலையுதிர் காலத்தில் 650 பில்லியன் கிலோ கிராம் தானியங்களை உற்பத்தி செய்வதையே இலக்கை நோக்கி நடைபோட்டு கொண்டு இருக்கிறது சீன மக்கள் குடியரசு.

Related Stories: