உக்ரைன் நிலைமை உலகத்திற்கே கவலை: ஐ.நா-வில் இந்திய அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: உக்ரைனில் தற்ேபாது ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த  உலகத்திற்கே கவலை அளிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபை கூட்டத்தில் பேசுகையில், ‘நீண்ட காலமாக நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்பாக இந்தியா கவலையடைந்து வருகிறது. அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றால், இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதின் அவசியத்தை மீண்டும் இந்தியா வலியுறுத்துகிறது.

இந்திய பிரதமர் மோடி கூறியது போன்று, இருநாடுகளும் போரிடுவதற்கான நேரம் இதுவாக இருக்க முடியாது. போரின் போதும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறுவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அத்தகைய செயல் எங்கு நடந்தாலும் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உக்ரைனில் தற்ேபாது ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த  உலகத்திற்கே கவலை அளிக்கிறது’ என்று கூறினார்.

Related Stories: