×

சாலை விபத்தில் முதியவர் பலி

அண்ணாநகர்: நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (75). இவர் நேற்று கோயம்பேடு ரயில் நகர் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பைக்கில் சென்றபோது, அதிவேகமாக  வந்த மற்றொரு பைக் இவர்மீது  மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். தகவல் அறிந்து வந்த  கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக  விசாரிக்கின்றனர்.

Tags : Old man dies in road accident
× RELATED கிழக்கு கடற்கரை சாலையில் மின் கம்பம் மீது கார் மோதி முதியவர் பலி