×

ஊ சொல்றியா மாமா போல கவர்ச்சி பாடல்: புஷ்பா 2வில் மலாய்க்கா அரோரா

ஐதராபாத்: புஷ்பா 2வில் கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆட மலாய்க்கா அரோரா தேர்வாகியுள்ளார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படம் பல மொழிகளில் வெளியாகி, பெரிய வெற்றி பெற்றது. புஷ்பா படத்தை உருவாக்குவதற்கு முன்பே இது 2 பாகமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசிலுடன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதேபோல் சாய்பல்லவி நடிக்க இருப்பதாகவும் சிலர் புரளி கிளப்பினர்.

அதையும் படக்குழு மறுத்துவிட்டது. இந்நிலையில் பாலிவுட் நடிகை மலாய்க்கா அரோராவின் பெயர் தற்போது அடிபட்டுள்ளது. முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடியிருந்தார். இரண்டாம் பாகத்திலும் இதுபோல் கவர்ச்சி நடனத்துடன் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதிலும் சமந்தாவை போல் ஒரு பிரபல ஹீரோயின் டான்ஸ் ஆடினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் விரும்பியுள்ளார். ஆனால் இந்த பாடலுக்கு மலாய்க்கா அரோரா டான்ஸ் ஆடினால் சரியாக இருக்கும் என டைரக்டர் சுகுமார் கூறிவிட்டாராம். இதையடுத்து கவர்ச்சி பாடலுக்கு ஆட மலாய்க்கா அரோராவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அவரும் நடிக்க சம்மதித்து விட்டாராம்.

Tags : Hot song like O Solriya Mama: Malaika Arora in Pushpa 2
× RELATED பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ....