×

சில்லி பாயின்ட்...

* இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம்  செப்.25ம் தேதி ஐதரபாத்தில் நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் விற்பனை  அங்குள்ள ராஜீவ் காந்தி அரங்கில் நேற்று நடந்தது. டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் காத்திருந்தனர். விற்பனை தொடங்கியதும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் போலீசார் தடியடி நடத்தினர். அதில் ஏற்பட்ட  நெரிசலில் சிக்கி 7 பெண்கள் உட்பட சுமார் 25பேர் காயமடைந்தனர். சிலர் மயக்கமடைந்தனர்.  இதற்கிடையில் அரங்கத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ரஞ்சிதா என்பவர் உயிரிழந்ததாக புரளி கிளம்பியது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

* சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின்(ஐஓசி)  அறிவுறுத்தலை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்(ஐஓஏ) தலைவர் பொறுப்பில் இருந்து நரிந்தர் பத்ரா  நேற்று விலகினார்.  தற்காலிக  தலைவராக அனில் கன்னா பொறுப்பேற்று உள்ளார்.

* ‘‘ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவராக நான் வருவது எனது கைகளில் இல்லை’’ என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, முதல்முறையாக  ஐசிசி தலைவர் பதவி குறித்து பேசியுள்ளார்.

* இந்திய ஹாக்கி அணியின் முன்கள ஆட்டக்காரர் லலித் உபாத்யாய, ‘ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் இருக்கிறோம். சொந்த மண்ணில் போட்டி  நடப்பது நமக்கு சாதகம். அதன் மூலம் 48 ஆண்டுகளாக  வசப்படாத உலக கோப்பை, நம் கைக்கு வரும் ’ என்று உற்சாகமாக கூறியுள்ளார்.

Tags : Silly Point
× RELATED ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்