திமுக 15வது பொதுத்தேர்தல் மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியினர் குவிந்தனர்

சென்னை: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு கிளை, பேரூர், மாநகர வட்டம், ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தது.

முதல் நாளான நேற்று கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் மாவட்டங்களுக்கான அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. நிர்வாகிகள் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் கூட்டத்தால் களைகட்டியது.

இன்று நீலகிரி, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டங்கள், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, கரூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது.25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)-வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை), வேலூர் மத்திய, வேலூர் மேற்கு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது.

Related Stories: