×

துறைமுகங்கள் வரைவு மசோதா 2022-ல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

சென்னை: துறைமுகங்கள் வரைவு மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிப்பதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் வரைவு மசோதா 2022-ல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குறிப்பாக இந்த மசோதாவானது கடலோர மாநிலங்களின் உரிமையை பாதிப்பதாகவும், துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் உரிமையை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றவேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் தனியாரின் பங்களிப்பு காரணமாக மாநில அரசுகளுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் தனியாருக்கு செல்ல வாய்ப்புள்ளதால், இது தொடர்பான பிரிவுகளை நீக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களை தனியாருக்கு கொடுக்காமல் மாநில அரசுகளுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,MC K. ,Stalin , Draft Ports Bill 2022 needs various amendments: CM Stalin's letter to PM
× RELATED மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின்...