பொன்னாக விளங்கும் செப்டம்பர்... நகைக்கடையில் அலைமோதும் மக்கள்..!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது.

இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடந்த 17ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவுடன், அதாவது சவரன் ரூ.112 குறைந்து ரூ.37,120-க்கும், கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,640-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நேற்றைய தினம் காலை நிலவரப்படி தாகத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகைக்கடைகளில் முண்டியடித்துக்கொண்டு நகை வாங்க ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் இன்றைய தினம் மக்களை மேலும் வானில் பறக்க வைக்கும் அளவுக்கு தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.61,800-க்கும் விற்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை சரிந்திருப்பது  இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், நகை வாங்கும் ஆர்வத்தையும் மக்களிடையே அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: