×

கடலை உருண்டை

செய்முறை

பச்சை வேர்க்கடலை என்றால் அதை வெறும் வாணலியில் வெடிக்கும் சத்தம் கேட்கும் வரை அடுப்பை குறைத்து வைத்து வறுக்கவும். ஆறியவுடன் கையால் கடலையை தேய்த்து விட்டு, பின்னர் ஊதினால் தோல் எல்லாம் பறந்துவிடும். இதை இரண்டு பாதியாக உடைத்து தயாராக வைத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். கரைந்தவுடன் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகை தண்ணீர் உள்ள கிண்ணத்தில் இரண்டு சொட்டு விடவும். அது உருட்ட வந்தால் அதுதான் உருட்டு பதம். உருட்டு பதம் வந்தவுடன் பாகை ரெடியாக வைத்திருக்கும் கடலையில் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும். கையில் நெய் தடவிக்கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!