×

பாலக் சிக்கன்

செய்முறை:

பாலக் கீரையை சுத்தம் செய்து வெந்நீரில் 1 நிமிடம் சேர்த்து எடுத்து ஆறவைத்து பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து அரைவேக்காடாக வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலம், கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து  மசியும் வரை வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் அதில் பாலக் விழுது, உப்பு சேர்க்கவும். இத்துடன் சுத்தம் செய்து அரைவேக்காடாக வேகவைத்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும். சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்