கோதுமை முருங்கைக்கீரை அடை

செய்முறை:

முருங்கைக்கீரையை சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பு வகைகளை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கோதுமை மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கைக்கீரை சேர்த்து கலக்கவும். தோசைக்கல் சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சத்து நிறைந்த கோதுமை முருங்கைக்கீரை அடை ரெடி.

Related Stories: