×

வறுத்துப் பொடித்த சாம்பார்

செய்முறை:

துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு, மிளகாய்ப் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.

Tags :
× RELATED கொரோனாவால் சவாலாகும் மனநல சிகிச்சை