உயிர் காக்கும் உணவுகள்

நன்றி குங்குமம் தோழி

வெள்ளைப்பூண்டு:

குடலில் உள்ள புழுக்களில் இருந்து தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப்பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலஸ்ட்ரால் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. பூண்டு இதயத்திற்கு பலம் சேர்க்கிறது.

வெங்காயம்:

வெங்காயம் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்றுநோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த்தொற்றைத்தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் எள்  என்ற ராசயனப் பொருட்கள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. புற்றுநோய் கட்டிகள் வராமலும் பாதுகாக்கும்.

முட்டைகோஸ்:

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைகோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்களை அகற்ற உதவுகிறது. இதனால், நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். முட்டைகோஸுக்குப் புற்றுநோய்யை தடுக்கும் ஆற்றல் உண்டு.

தொகுப்பு: சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

Related Stories:

>