எடையை குறைக்கும் பலா!

நன்றி குங்குமம் தோழி

பலா மரத்தின் பலம்!

பலா மரத்தின் இலையில் இருந்து மரப்பட்டை, பழம், விதை, பிசின் எல்லாமே மருந்துக்கு பயன்படுகிறது. பலாவின் பலம் என்ன என்று பார்த்தால் ஒரு பலாப்பழத்தில் குறைந்தபட்சம் 100 சுளை, 100 விதைகள் என்று இருக்கும். ஆண்களுக்கு  உயிரணுக்கள் குறைவாக இருக்கிறது என்றால், மிகப்பெரிய அளவில் உயிரணுக்களைப் பெருக்கும் முக்கிய சக்தியாக பலா மரத்தின் பட்டை, கொட்டை, பிசின் இருக்கிறது.

 

மாதவிலக்கு கோளாறுகளுக்கு பலா மரப்பட்டை!

பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் அதிகமாக இருக்கும்போது, பலாமரத்தின் மரப்பட்டை, இலை கஷாயம் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. பலாமரம் எப்போதும் மிகப் பொறுமையாக வளரும் மரம். ஆனால், இந்த மரத்தின் பலன்களோ மிகப்பெரியது. பலாமரத்தின் பட்டை,  இலை கஷாயம்- மூலம், பவுத்திரம் என்று உபத்திரவம் கொடுக்கும் வலிகள் நிறைந்த  பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

 

உடம்பு வலிக்குதே...!

உடல்  வலி என்றால், பலா மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் பழுத்த இலைகளை எடுத்து வந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளித்தால் உடல் வலி பறந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாறு இலைகளை கொதிக்க வைத்த தண்ணீரில் குளித்தால் உடல் அசதி இருக்காது. வாதம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு வாதம் குறையும். இப்படி வெளிப்புறமாகவே வலியை குறைக்கும் அருமருந்தாக இருக்கிறது பலா மரத்தின் இலைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீர்.

 

சருமம் பளபளக்க...மினுமினுக்க!

தோல் மினுமினுப்பாக, பளபளப்பாக வேண்டும் என்று நினைத்து கடையில் விற்கும் வெளிப்பூச்சுக்களை வாங்கி  பயன்படுத்தி வருபவர்கள் தினமும் இரண்டு பலாச்சுளைகளை சாப்பிட்டு வந்தால்  நிச்சயம் பலன் கிடைக்கும். 100 நாட்கள் இப்படி சாப்பிட்டு பாருங்கள், உங்களது தோல் மினுமினுப்பாக பளபளப்பாக ஜொலிக்கும். ஸ்கின் டோன் கம்ப்ளீட்டா மாறி இருக்கும்.

 

சர்க்கரை வியாதிக்கு கெடுதல் இல்லை!

பலாப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதிக்கு கெடுதல் இல்லை. பலாப்பழத்தில் குளுக்கோஸ் இல்லை, சுக்ரோஸ் மட்டுமே இருப்பதால், இது வயிற்றில் சென்று எந்த பக்கவிளைவையும் உண்டாக்காமல் அப்படியே  வெளியில் வந்துவிடும்.

 

ஆஹா... உடல் எடை குறையுமாமே!

உடல் எடை குறைய வேண்டுமானால், காலை மதியம் இரவு என்று சாப்பிடுவதற்கு முன்னர் இரண்டு பலாச்சுளையை சாப்பிட்டு வர வேண்டும். பலாப்பழத்தில் புரோட்டீன் மட்டுமே நிறைந்து உள்ளதால், உடல் எடை கூடாது. ஆனால், சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும். சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்கும். இந்தோனேஷியாவில் அதிகமாக பலா மரங்கள் உண்டு.

அவர்கள் சர்க்கரை நோய்க்கு பலாச்சுளைகளையே மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள். பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பலாப்பழத்தை உணவாக சாப்பிடலாம். ஆனால், மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது நிச்சயம் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது.

Related Stories:

>