நன்றி குங்குமம் தோழி
மழை, பனி என மாறி மாறி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜுரம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்* குளிர்காலத்தில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. * குளிர்காலத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை பாதிப்பதாலே நோய்கள் ஏற்படுகிறது.* குளிர்காலத்தில் வைரஸ் கிருமியின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது சாதாரணமாக நமது கைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகள் சுமார் மூன்று மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.* வைரஸ் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக கைகளை குலுக்கும்போது, நெருங்கிப் பழகுவதாலும் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.
நோய்களை தடுக்க* அவ்வப்போது கை கழுவ வேண்டும்.* பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள், லிக்வுட் போன்றவை பயன்படுத்தலாம்.* மற்றவர்களை தொட்டுப் பேசுவதை தவிர்க்கலாம்.* வைட்டமின் ‘சி’ சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.* தினமும் தேன் சிறிது குடித்து வந்தால் வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.* பனியில் இருந்து தற்காத்துக்கொள்ள வெளியே செல்லும்போது காதுகளில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளலாம். அல்லது குல்லா, மப்ளர் போன்றவை பயன்படுத்தலாம்.* உல்லன் ஸ்வெட்டர் பயன்படுத்தலாம்.* ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.* குளிர்பானங்கள் மற்றும் நீர்ச்சத்து காய்கறிகளை தவிர்க்கலாம்.* கொதிக்க வைத்து, ஆற வைத்த சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.
இதனை பின்பற்றினாலே இந்த ஜில் கிளைமேட்டிலிருந்து தப்பித்து விடலாம்.
தொகுப்பு: ஜே.மாணிக்கவாசகம், சேலம்.