×

ரவை அப்பம்

செய்முறை

வெள்ளை ரவையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி நீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வாழைப்பழத்தை மசித்து அதில் சேர்த்து சர்க்கரை சேர்த்து மைதா, கோதுமை, அரிசி மாவுகளைச் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து உலர் பருப்புகள் சேர்த்துக் கலந்து (மாவு இட்லி மாவு பதம் இருக்க வேண்டும்) எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் கரண்டியால் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் படைக்கவும்.

குறிப்பு: எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக குழிப்பணியாரக்கல்லிலும் ஊற்றி எடுக்கலாம்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!