பிரபலமான வணிக நிறுவனர் டாக்டர் S.பீட்டர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.!

சென்னை: 01.09.1954ல் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்னும் ஊரில் சூசையா பிள்ளை - லூர்து அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்து, இன்று பல மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவும் பல உதவிகளையும் புரிந்து வருகிறார்.1980ம் ஆண்டு முதல் சென்னையை சுற்றி பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கி பல ஆயிரம் மனைகளை உருவாக்கி வணிகத்தில் பிரபலமான வணிக நிறுவனரே!.

1996ம் ஆண்டு தனது தந்தை மறைந்த சூசையா பிள்ளையின் பெயரில் அறக்கட்ளை ஒன்று நிறுவி சூசையா பீட்டர் எஜுகேஷ்னல் டிரஸ்ட் என்னும் பெயரில் அறக்கட்டளையையும், 1999ம் ஆண்டு தனது தாயார் லூர்து அம்மாள் பெயரில் கல்வி அறக்கட்டளையை தொடங்கி பெண்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், கல்வியின் மூலம் பெண்களை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை தந்து நல்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்பித்து, சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பல இடங்களிலும், நாடு முழுவதும் உயர்தர தொழில்முறை கல்வியை தன்னார்வ நோக்கத்துடன் உருவாக்கிய கல்வி தந்தையே! பெண்களின் கல்வி தரத்தை உயர்த்த வந்த கல்வி வள்ளலே!

தொழில்முறை கல்வியை வழங்கி பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, வருங்கால இளைஞர்களுக்கு வாழ்வளித்த உத்தமரே!

மாதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் , பிராபர்ட்டிஸ், மாதா ரெசிடன்சி நிர்வாக இயக்குனர்,

மாதா எண்டர்பிரைசர், மாதா ஏஜென்ஸி, அன்னை மாதா எண்டர்பிரைசஸ் உரிமையாளர்,

தமிழ்நாடு மைனாரிட்டி செல்ஃப் பைனான்ஸிங் இன்ஜினியரிங் கல்லூரி துணை செயலாளர்,

தமிழ்நாடு மைனாரிட்டி செல்ஃப் பைனான்ஸிங் இன்ஜினியரிங் கல்லூரி செயற்குழு உறுப்பினர்,

புதுக்கோட்டை மாவட்டம், கிறிஸ்டியன் எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர்,

அசோசியேஷன் ஆப் மைனாரிட்டி அன்எய்டட் கிறிஸ்டியன் இன்டிடுஷன்ஸ் செயலாளர்

2005ம் ஆண்டு Honorary Doctorate by US University மூலம் மதர் தெரசா எக்ஸ்லென்ஸ் விருது மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. முல்லைவேந்தன் மற்றும் மாண்புமிகு நீதியரசர் திரு. சிங்காரவேலு ஆகியோரின் பொற்கரங்களால் கல்வி ரத்னா விருது பெற்றுள்ளார்.  இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் S.பீட்டர் அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு காலம் பல கோடி நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கிறோம்.

Related Stories: