தேங்காய்ப்பால் அவல்

செய்முறை: 

அவலைக் கழுவிச் சுத்தம் செய்தபின் நன்கு தேங்காய்ப்பாலில் மூழ்க விட்டு நன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய அவலில் 20 நிமிடம் கழித்து சிறிய துண்டுகளாக நறுக்கிய பேரீட்சை, உலர் திராட்சை, முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், வெல்லம், உப்பு இவை அனைத்தையும் மொத்தமாகக் கலந்தால் சுவையான தேங்காய்ப்பால் அவல் தயார். 

பயன்கள்: 

நல்ல பசி தாங்கக்கூடிய சத்து உணவு. உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமான காப்பர் மற்றும் வைட்டமின் சி உள்ளது. சருமம் மற்றும் ரத்தக் குழாய்களை நெகிழச் செய்யும் தன்மை கொண்டது. ஒரு கப் தேங்காய்ப்பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் 25% சதவீதம் இரும்புச்சத்துள்ளது. 

Related Stories: