நட் பட்டர் கப்ஸ்

செய்முறை

முதலில் பாதாம் மற்றும் பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து நன்கு அடிக்கவும். பின் இதன் கலவையை எடுத்து கப்கேக் கவரில் கால்வாசி போட்டு நன்கு அழுத்தவும். பின் அதன் மேல் சிறிது பீநட் பட்டரை சேர்க்கவும். இதை குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், தேங்காய் எண்ணெய், தேன் ஆகியவற்றை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள நட் பட்டர் கப்ஸை எடுத்து அதன் மேல் இந்த கோகோ மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை சேர்த்து, அதன் மேல் நறுக்கிய பாதாமை சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வைத்து எடுத்து பின் பரிமாறலாம். மிகவும் ருசியானது மற்றும் சத்தானது. தேங்காய் எண்ணெய் வாசம் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் நொடியில் காலியாகிவிடும்.தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து டீஸ்பூன் வரை பயன்படுத்துவது சிறந்தது.

Related Stories: