தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பனீரை சுடு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் பனீர் மிருதுவாகி விடும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், ஏலக்காய், கரம்மசாலாத்தூள், லேசாக தண்ணீர் சேர்த்து, தக்காளியை போட்டு வதக்கி, பனீர், உப்பு போடவும். மசாலா நன்கு கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு :  பனீரை எண்ணெயில் பொரித்தும் செய்யலாம்.

Related Stories:

>