தக்காளி கீரை மிக்ஸ் மசியல்

எப்படிச் செய்வது?

சிறுகீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சீரகம், இடித்த பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கி, மஞ்சள் தூள், நறுக்கிய காய்ந்தமிளகாயை சேர்க்கவும். பின்பு கீரை, பாசிப்பயறு, கறிவேப்பிலை, தக்காளி, உப்பு போட்டு வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். பிளெண்டரால் மசித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: செங்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரையிலும் மசியல்செய்யலாம்.

>