எட்டிமடையில் செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் வனத்துறை தையல் பயிற்சி மையம்

மதுக்கரை:  மதுக்கரை தாலுகா வனங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும் சின்னாம்பதி  புதுப்பதி முருகன்பதி அய்யம்பதி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களும் இருப்பதால்  இங்கு வனத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு  வருகிறது.மதுக்கரையை அடுத்துள்ள எட்டிமடையில் வனத்துறை மற்றும்  பொதுமக்களை இணைந்து கிராம வனக்குழு ஏற்படுத்தப்பட்டு அந்த குழுவின் மூலம்  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அங்குள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கும்  வகையில் தையல் பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டது.அதன் மூலம் அந்த  பகுதியை சேர்ந்த பெண்கள் தையல் பயிற்சி பெற்று வந்தனர்.

 இந்தநிலையில்,  ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே திடீரென அந்த தையல் பயிற்சி மையம் மூடப்பட்டது. இதனால் இந்த  பகுதியை சேர்ந்த பெண்களுக்கு ஏமாற்றம் அடைந்தனர். இன்றுவரை அந்த தையல்  பயிற்சி மையம் திறக்கப்படாததால் அந்த கட்டிடம் புதர் மண்டி பாழடைந்து  கிடக்கிறது. மேலும் பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி மையம்  பயன்படாமல் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அந்த பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘எங்கள்  பகுதியில் கிராம வனக்குழுவின் தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டதும் நாங்கள்  அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். தையல் பழக ஆர்வமாக இருந்தோம். ஆனால் திறந்த  சில வாரங்களிலேயே பயிற்சி மையத்தை மூடி விட்டனர். வருடக்கணக்கில்  பூட்டி கிடப்பதால் கட்டிடம் பாழடைந்து மெஷின்களும் பராமரிப்பின்றி  கிடக்கிறது. எனவே பெண்களின் முன்னேற்றத்திற்காக துவங்கப்பட்ட இந்த பயிற்சி  மையத்தை வனத்துறையினர் உடனடியாக இந்த திறந்து எங்களுக்கு தையல் பயிற்சி  அளிக்க வேண்டும்’’, என்று கூறினர். 

Related Stories: