தாந்தோணிமலையில் பாதுகாப்பின்றி மேல்நிலை தொட்டி: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

கரூர்: கரூர் தாந்தோணிமலையில் எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ள மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மாரியம்மன் கோயில் அருகே மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொட்டியில் இருந்து நீர் ஏற்றப்பட்டு, பல்வேறு குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொட்டி வளாகத்தை சுற்றிலும், கோயில், குடியிருப்புகள் போன்றவை அதிகளவு உள்ளன. ஆனால், தொட்டி வளாகம் எந்தவித பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளதால், இந்த வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், தாந்தோணிமலை மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: