போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு 24 ஆண்டுக்கு பின் மாஜி எம்எல்ஏ கைது

மோதிஹரி: பீகார் மாநிலம், கோவிந்த்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரஞ்சன் திவாரி. இவர், 1998ம் ஆண்டு உபி மாநிலம்  கோரக்பூரில் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். கடந்த 24 ஆண்டுகளாக நாடு முழுவதும் போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவித்தனர். இந்நிலையில், பீகார் - நேபாள எல்லையில் ரக்சோல் என்ற இடத்தில் திவாரியை  உபி., பீகார் போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்ட எஸ்பி குமார் அஷிஷ் கூறுகையில், ‘‘20 ஆணடுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த திவாரி மீது பீகாரிலும் பல வழக்குகள் உள்ளன. அது பற்றி விசாரணை முடிந்ததும் அவரை உபி போலீசாரிடம் ஒப்படைப்போம்,’’ என்றார்.

Related Stories: