வேலூரில் போலி மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கி கொடுத்தவர் குண்டாசில் கைது

வேலூர்: வேலூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில், வேலூர் மாவட்டத்தில் மாற்றத்திறனாளிகள் அல்லாதவர்கள் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை பெற்று நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர்  என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதல்கட்டமாக போலி சான்றிதழ் மூலம் தேசிய அடையாள அட்டை பெற்ற குடியாத்தம் தாலுகா லட்சுமணாபுரத்தை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணையும், போலி சான்றிதழ் மூலம் பலருக்கு தேசிய அடையாள அட்டையை வாங்கி கொடுத்த வேலூர் வேலப்பாடியை சேர்ந்த தினகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல் போலி சான்றிதழ் மூலம் சிறுவன் ஒருவனுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்று கொடுத்த காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஆவின் பாஸ்கர்(46) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஆவின் பாஸ்கர் மீது இதேபோன்ற புகார்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி உத்தரவிட்டார்.

Related Stories: