நெல்லை கண்ணன் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

நெல்லை: பட்டிமன்ற இலக்கிய பேச்சாளரான நெல்லை கண்ணன்(77) நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக காலமானார். நேற்று காலை அவரது உடலுக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ, தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாஜ சார்பில் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். விடுதலைசிறுத்தைகள் சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று பிற்பகலில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு. நெல்லை கண்ணனின் உடல் டவுன் கருப்பந்துறை சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

Related Stories: