கோவை, திருப்பூர், ஈரோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதியில் செயல்பாட்டுக்கு வரும் நலத்திட்டங்களை நேரில் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 23ம் தேதி விமானம் மூலம் கோவை சென்று, அன்று இரவு கோவையில் தங்குகிறார். பின்னர் 24ம் தேதி கோவையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் ஈரோடு மாவட்டம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து 25ம் தேதி திருப்பூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறு, குறு தொழில் நிறுவன அதிபர்கள் பங்கேற்கும், ‘தொழிலுக்கு தோள் கொடுப்போம்’ என்ற மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். 26ம் தேதி ஈரோடு மாவட்டம் செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளில், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: