வேளாண் விளைபொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: வேளா ண் விளைபொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென்சென்னை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சா.அன்பழகன், இணைச்செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் எஸ்.பி.சண்முகசுந்தரம், ஜாபர்கான்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் சி.இளங்கோ முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வி.ஆனந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று, தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக எம்.ஆர்.பன்னீர்செல்வம், செயலாளராக என்.பி.பாலன், பொருளாளராக வீரபாண்டி மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் உணவு வணிகம், செஸ் வரி விதிப்பால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை கவனத்தில் கொண்டு மாநில அரசு, வேளாண் விளைபொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும். நகராட்சி, உள்ளாட்சி, அறநிலையத்துறை கடைகள் வாடகை உயர்வை மறு பரிசீலனை செய்து சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: