இன்டர்ன்ஷிப் ஆட்தேர்வு முகாம் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை ஐஐடியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாணவர்களின் இன்டர்ன்ஷிப்  பயிற்சிக்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை 32% உயர்ந்துள்ளது என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியின் 2022-23ம் வருட  மாணவர்களுக்காக இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் ஆகஸ்ட் 6ம் தேதி மற்றும் 13ம் தேதி ஆகிய நாட்களில் இரண்டு அமர்வுகளாக நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து ஹாங்காங்,  சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களும்  வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளுக்கான எண்ணிக்கை முதல் நாளிலேயே 32% அதிகரித்து இருக்கிறது.

நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நேர்காணல் நடத்தப்பட்டு, முதன்முறையாக ஹைப்ரிட் முறையில் இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் நடந்துள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த முறை இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக சென்னை ஐஐடிக்கு  வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளது. 7 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 15 சர்வதேச இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 48% அதிகரித்துள்ளது.

* பயிற்சி நிறுவனங்கள் எவை?

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக அதிக இடங்கள் வழங்கிய நிறுவனங்கள் விவரம்:

டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் - 40 பேர்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் - 20 பேர்

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் - 17 பேர்

கோல்ட்மேன் சாக்ஸ் - 16 பேர்

Related Stories: